ஆஸ்திரேலிய சினிமா: Van Diemen's Land

Source: Dhamu Pongiyannan
1822-ஆம் ஆண்டில் தாஸ்மானியாவின் Macquarie Harbour சிறைச்சாலையில் இருந்து, Alexander Pearce உள்ளிட்ட எட்டு சிறைக் கைதிகள் தப்பியோடுகின்றனர். ஆள் அரவம் அற்ற தீவு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை படர்ந்துள்ள அடர்ந்த வனப்பரப்பு, உறைய வைக்கும் குளிர், கணிக்க முடியாத வானிலை, கொலைப் பட்டினி – இந்தப் பின்னணியில், தப்பியோடிய கைதிகளில் வலு குறைந்த ஒவ்வொருவரும், தங்களின் கூட்டாளிகளால் கொல்லப்பட்டு உண்ணப்படுகின்றனர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட நெஞ்சை உறைய வைக்கும் இந்தத் திரைப்படம் குறித்தான தனது பார்வையை SBS தமிழ் நேயர்களுக்காக முன்வைக்கிறார் முனைவர் தாமு.
Share