சிலந்திகளைப் பொறுத்தவரை funnel-web என்பதுதான் ஆபத்தானது எனவும்பலரும் நினைப்பதுபோல redback சிலந்திகளால் இறப்பு ஏற்படுவதற்கான அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை குறைவாகவே காணப்படுகிறது எனவும் கூறுகிறார் NSW Poisons Information Centre-இன் Medical Director Darren Roberts.
Redback சிலந்தியில் விஷம் இருந்தாலும், பாதிப்புகள் உருவாக பல மணிநேரம் ஆகும். அதேநேரம் நோய் அறிகுறிகள் அல்லது தீவிரமான அறிகுறிகள் இல்லாவிட்டால் இதற்கு மருத்துவ சிகிச்சை தேவையில்லை.
Funnel-web தவிர ஏனையவை, அதாவது redback உட்பட எந்த சிலந்திக்கடிக்குமான முதலுதவி ஒரேமாதிரியானதாகும்.
Antiseptic எனப்படும் தொற்றுநீக்கிகொண்டு பாதிக்கப்பட்ட பகுதியைக் கழுவுவதுடன், பாரதூரமான அறிகுறிகள் தோன்றுகிறதா என்பதை அவதானிக்க வேண்டும்.

சிலந்தி கடித்த பிறகு அந்த இடத்தில் வலி பொதுவானது. ஒரு ஐஸ் பேக்கை கடித்த இடத்தில் நேரடியாக 15 நிமிடங்களுக்குப் பயன்படுத்துவது வலியைக் குறைக்க உதவும்.
ஆனால் funnel-web சிலந்தி கடி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
Funnel-web சிலந்திக்கடி வலி மிகுந்தது. அது கடிக்கும் போது, விஷத்தை உட் செலுத்துவதால் மிக விரைவாக, 30 முதல் 60 நிமிடங்களுக்குள், மக்கள் அறிகுறிகளை உணரத்தொடங்கலாம். இது உயிருக்கு ஆபத்தான விஷத்தை உட்செலுத்துவதால் ஆம்புலன்ஸ் தேவைப்படலாம் என்பதுடன் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை தேவைப்படக்கூடும் என்கிறார் NSW Poisons Information Centre-இன் Medical Director Darren Roberts.

இதேவேளை புள்ளிவிபரங்களின்படி, ஆஸ்திரேலியாவில் கொடிய பாம்புக்கடிகள் அரிதானவை.
ஆஸ்திரேலியாவில் ஆண்டொன்றுக்கு ஒவ்வொரு 3000 பாம்புக்கடிக்கும், சராசரியாக இரண்டு இறப்புகள் மட்டுமே இடம்பெறுவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சில கடிகள் dry- அதாவது பாம்பு தாக்கினாலும் விஷம் உட்செலுத்தப்படாதவையாக இருக்கலாம் என்றபோதிலும் ஒவ்வொரு பாம்புக் கடியும் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டும் என Royal Flying Doctor Serviceஇன் மருத்துவர் ஷான் ஃபிரான்சிஸ் வலியுறுத்துகிறார்.

ஆஸ்திரேலியாவின் கிராமப்புற மற்றும் தொலைதூர சமூகங்களில் பாம்பு மற்றும் சிலந்தி கடிக்கு உள்ளானவர்களின் முதல்நிலை தொடர்பாக Royal Flying Doctor Service காணப்படுவதாக சொலலும் Dr ஷான் ஃபிரான்சிஸ், 1300 69 7337 இல் தமது டெலிஹெல்த் லைனை அழைக்கலாம் என்கிறார்.
இதேவேளை funnel-web சிலந்தி குடும்பத்தைச் சேர்ந்ததோ அல்லது அந்தக்குடும்பத்தைச் சேராத சிலந்தியாகவும் இருக்கக்கூடிய பெரிய, கருப்பு சிலந்தி ஒன்று கடித்தால் அதை மருத்துவ அவசரநிலையாகக் கருதவேண்டுமென கூறுகிறார் SW Poisons Information Centre-இன் Medical Director Darren Roberts.

பாம்புகள் தாம் அச்சுறுத்தப்பட்டதாகவோ அல்லது பயமாகவோ உணராத வரை அவை நம்மைத் தாக்க வாய்ப்பில்லை என்கிறார் விக்டோரியா பிராந்தியத்தில் உரிமம் பெற்ற பாம்பு பிடிப்பவரான Gianni Hodgson.
பாம்பைக் கண்டால் பெரிய சத்தம் போடாமலிருப்பதுடன் பாம்பு தன்னை தற்காத்துக்கொள்ளும் நிலைக்குச் செல்லாதவாறு பார்த்துக்கொள்வது அவசியம் என்கிறார் Gianni Hodgson.

ஒருவருக்கு சிலந்தி கடித்த பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றால் நாடு முழுவதும் உள்ள Poisons Centreஐ 13 11 26 என்ற எண்ணில் மக்கள் அழைக்கலாம்.
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பாம்புக்கடிகளுக்கும், உடனடியாக 000வை அழைப்பது அவசியமாகும்.




