சமீபத்தில், ஆஸ்திரேலியா முழுவதும் நடைபெற்ற பேரணிகள், ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிராக பயத்தையும், சில சந்தர்ப்பங்களில் வன்முறையையும் தூண்டியுள்ளன.
தன்னார்வ தொண்டு சேவை அல்லது சமூகக் குழுவின் ஒரு உறுப்பினராக இருப்பது, சமீபத்தில் நாம் காணும் வன்முறை மற்றும் கோபம் நிறைந்த பிளவுகளைத் தடுப்பதில் உண்மையில் உதவலாம். என்று கூறுகிறார் விக்டோரியா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் Mario Peucker.
ஆஸ்திரேலியாவில் பன்முக கலாச்சாரம் பின்னணியில் மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் அக்கறை காட்டுகிறார்கள் — எனவே நம்பிக்கையுடன் இருக்க நாம் நல்ல காரணங்கள் வைத்திருக்கிறோம் என்கிறார் Dr James O’Donnell.
ஒவ்வொருவரும் முக்கியமானவராக இருக்க விரும்புகிறார்கள், பிறரால் மதிக்கப்படவும் அங்கீகரிக்கப்படவும் விரும்புகிறார்கள்.
வெறுப்பை புரிந்துக்கொள்ளுதல் தொடர் முழுவதும், அதிகரித்து வரும் வெறுப்பு நிலைகளைப் பற்றி கவலைப்படும் நிபுணர்கள் மற்றும் சமூக தலைவர்களின் கருத்துகளை நாம் கேட்டறிந்தோம். இந்தப் பிளவைப் பற்றி கவனம் செலுத்தும் போது, உலகம் இருண்டதும் பெருமளவு சிரமமானதுமாக தோன்றலாம். ஆனால் கலாசார இடைவெளிகளை இணைத்து, ஒற்றுமையை உருவாக்க மக்கள் ஒன்றிணைந்து பணிபுரியும் நேர்மறைப் பதிவுகளையும் நாம் கேட்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வது பயனுள்ளது.
‘Understanding Hate’ தொடரின் இறுதி அத்தியாயத்தில், நாங்கள் பிரிவினையை எப்படித் தடுக்கலாம்? சமூக ஒற்றுமையை எப்படி பாதுகாக்கலாம்? என்பது குறித்து ஆராய்கிறோம்.
SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Nick Zoumbulous எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


