“பர்மாவில் தமிழர்களின் வரலாறு 2000 ஆண்டுகள் பழமையானது”

Source: SBS Tamil
புலம் பெயர் இலக்கியம், அயலக இலக்கியம் எனும் தளங்களில் தமிழுணர்வாலும், தமிழ் புலமையாலும், படைப்பாற்றலினாலும் தனெக்கென தனியிடம் பெற்று வளம் வருபவர் மாத்தளை சோமு அவர்கள். ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். உயரிய மானுடப் பண்புகளுடன் உலகின் பல நாடுகளுக்குச் சென்று தமிழர்களின் வாழ்வை எழுத்துக்களில் காட்சிப்படுத்திவரும் அவரின் சமீபத்திய முயற்சி “பர்மாவும் தமிழர்களும்” எனும் நூல். அந்த நூல் குறித்து மாத்தளை சோமு அவர்களோடு உரையாடுகிறார் றைசெல். புத்தக வெளியீட்டு நாள்: 1 அக்டோபர் (திங்கள்), மாலை 5 மணி, Regum Centre, Wentworthville, NSW, 2145. அதிக தகவலுக்கு: மாத்தளை சோமு - 0420440008
Share



