பூர்வீகக் கலை மற்றும் கைவினைப் பொருட்களை சரியான முறையில் வாங்குவது எப்படி

Australia Explained - Indigenous Art

According to Productivity Commission estimates, three quarters of Indigenous-style souvenirs in the Australian market are made overseas. Credit: Richard I'Anson/Getty Images

ஆஸ்திரேலியாவில் பூர்வீகக் கலை மற்றும் கைவினைப் பொருட்களை சரியான முறையில் வாங்குவது எப்படி என்பது தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்


ஆஸ்திரேலியாவில் பூர்வீகக் ஆஸ்திரேலியாவில் பூர்வீகக்கலை அல்லது அதனால் ஈர்க்கப்பட்டதாக விற்பனை செய்யப்படும் நினைவுப் பொருட்களில் நான்கில் மூன்று போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

அப்படியானால், எது உண்மையானது என்பதை நீங்கள் எப்படி அறிந்துகொள்வது? அது ஏன் முக்கியம்?

இந்த விவரணத்தில் போலி கலைப்பொருட்களின் தாக்கம், நெறிமுறைப்படி தயாரிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காணும் வழிகள், அவற்றை எங்கு வாங்கலாம் என்பதைக் குறித்து அறிந்துகொள்வோம்.

இதன் மூலம், ஆஸ்திரேலியாவில் முதற்குடிகளின் கலை மற்றும் கைவினைப் பொருட்களை நம்பிக்கையுடன், நெறிமுறையுடன் வாங்க உதவுவோம்.

பூர்வீகக்குடிமக்களின் கலைப்பணிகள் மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குவது, உங்களுக்கான ஒரு அழகான பொருள் என்பதோடு மட்டுமல்லாமல், உண்மையான கலாச்சார, சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தையும் உருவாக்குகிறது. பல பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுமக்களின் கலைப்படைப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களுக்குப் பின்னால், தலைமுறைகள் வழியாகக் கடத்தப்பட்ட அறுபதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கலாச்சார அறிவு உள்ளது.

Indigenous Cultural and Intellectual Property - ICIP என்பது பூர்வீகக்குடி மக்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சார நடைமுறைகள் மற்றும் அவை தொடர்பான பொருட்கள் குறித்த அவர்களின் உரிமைகளை விவரிக்கிறது.

அப்படியானால், பூர்வீகக்குடி மக்களின் கலைப்பொருட்களை வாங்குபவர்கள் இதைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

Australia Explained - Indigenous Art
A carved wooden fish from the Torres Strait Dauan Island community. Credit: Oliver Strewe/Getty Images

Quandamooka சமூகத்தைச் சேர்ந்த Intellectual Property வழக்கறிஞர் Stephanie Parkin இதுகுறித்து விளக்குகிறார்.

குறிப்பாக Indigenous Cultural and Intellectual Property - ICIP என்பது கலைப்படைப்பின் பின்னணியில் உள்ள கதையையும், ஒரு கலைஞரை அந்தப் படைப்பை உருவாக்கவும், அந்த வழியில் தங்கள் கதையைச் சொல்லவும் தூண்டிய அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியது என அவர் விளக்குகிறார்.

போலி கலை, வணிகப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்களால் ஏற்பட்டுள்ள தீங்குகளை உணர்ந்து, பூர்வீகக்குடிமக்களின் அறிவு மற்றும் கலாச்சார வெளிப்பாட்டைப் பாதுகாக்க குறிப்பிட்ட சட்டங்களை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலிய அரசு உறுதியளித்துள்ளது.

பூர்வீகக்குடியினர் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட போலிப் பொருட்களின் பரவலான விற்பனையையும், முறையான உரிமம் இல்லாமல் Country என்பதன் வெளிப்பாடுகளைக் கொண்ட பொருட்களின் விற்பனையையும் நிறுத்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என Stephanie Parkin கூறுகிறார்.

“போலி கலைப்பொருட்களின் பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. இது பல தசாப்தங்களாக தொடர்கிறது. இது கலைஞர்களின் வருமானத்தை மட்டுமல்ல, அவர்களின் கலாச்சாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என அவர் விளக்குகிறார்.

Aboriginal Art Co 02[36] copy.jpg
Any piece of Aboriginal and Torres Strait Islander art over $250 should come with a Certificate of Authenticity. Credit: Aboriginal Art Co.

Stephanie Parkin, Indigenous Art Code அமைப்பின் தலைவராகவும் உள்ளார். 2007ஆம் ஆண்டு செனட் விசாரணைக்கு பிறகு தொடங்கப்பட்ட இந்த தேசிய அமைப்பு, கலைஞர்கள் மற்றும் அவர்களின் படைப்புகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுகிறது.

பூர்வீகக் கலைப்படைப்புக்களை வாங்க பல வழிகள் உள்ளன – கலைஞர்களிடமிருந்து நேரடியாக வாங்கலாம், Indigenous கலைக் கண்காட்சிகள் மூலம் அல்லது நாடு முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட Indigenous Art Centres வழியாக வாங்கலாம்.

நீங்கள் வாங்கும் பொருளில் Indigenous Art Code அமைப்பின் கருப்பு-சிவப்பு வட்ட லோகோ இருக்கிறதா என்பதைப் பார்ப்பது நீங்கள் சரியான முறையில் குறித்த பொருளை வாங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த உதவும்.

Wonaruah சமூகத்தைச் சேர்ந்த Saretta Fielding ஒரு கலைஞர், வடிவமைப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் Indigenous Art Code- இன் இயக்குநர்கள் குழுவில் பணியாற்றுகிறார்.

ஒரு பூர்வீகக் கலைப் படைப்பை வாங்குவது என்பது “ஒரு நெறிமுறை மற்றும் கலாச்சாரப் பயணம்” என்று அவர் கூறுகிறார், மேலும் அது சரியான கேள்விகளைக் கேட்பது எப்படி, சரியான வழிகளுடன் இணைவது எப்படி, மற்றும் ஒரு படைப்பின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவது எப்படி என்பதை மக்கள் அறிந்திருப்பது போன்ற மூன்று முக்கிய படிகளைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிடுகிறார்.

இருந்தாலும் நீங்கள் ஒரு அசல் கலைப்படைப்பையோ அல்லது உரிமம் பெற்ற வடிவமைப்பின் மறுஉருவாக்கம் கொண்ட ஒரு பொருளையோ வாங்கும்போது, அதை உருவாக்கியவர் யார் அது என்ன நிபந்தனைகளின் கீழ் வர்த்தகம் செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

Australia Explained - Indigenous Art
Dot painting is one of the many forms of Aboriginal art, and varies from region to region. Credit: Marianna Massey/Getty Images

ஒரு பொறுப்புள்ள வாங்குநராக இருப்பது, கலைஞர்களுக்கு நியாயமான ஆதரவை வழங்குவதைக் கடந்த ஒன்றாகும்.

இது பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு சமூகங்கள் தங்களின் பாரம்பரியத்தை தொடர்ந்து பகிர்ந்து கொள்ள உதவுகிறது என Saretta Fielding கூறுகிறார்.

நெறிமுறையுடன் வாங்குவதன் மூலம், நீங்கள் ஒரு நினைவுப் பொருளையோ அல்லது ஒரு அழகான கலைப்படைப்பையோ மட்டும் பெறுவதில்லை. அந்தக் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் அந்தப் படைப்புகளுக்குப் பின்னால் உள்ள சமூகங்களுக்கு ஆதரவளிப்பதிலும் நீங்கள் ஒரு பங்கை ஆற்ற முடியும்.

இது ஒரு சிறிய முடிவு, ஆனால் அது ஒரு நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தும்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.

உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now