File image from 2001 of refugee camp on the Island of Nauru Source: AAP
நௌரூவிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்றும், சுயதீங்கு விளைவிக்கிறார்கள் என்றும் கசிந்தள்ள செய்திகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்கள் குறித்து, Royal Commission, அரச விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற குரல் வலுப்பெறுகிறது.இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறும் ஆஸ்திரேலிய அரசு, இவையெல்லாம் உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகள் என்றும், பழைய கதைகள் என்றும் கூறுகிறது.தடுப்பு முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மனித உரிமைக்காக குரல் கொடுப்போர் முன்வைத்துள்ளார்கள். இவை குறித்து, Luke Waters மற்றும் Michelle Rimmer எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.