SKIP TO MAIN CONTENT

உளவியல் ஆலோசனையை AI வழங்க முடியுமா?

Left: Gowriharan Thanabalasingam, an identity and behavioural coach, content creator, public speaker, and a counsellor (supplied); Right:  AI Therapy Chatbot - Futuristic Medical Technology Interface with Stethoscope and Digital Hexagon Icons
Left: Gowriharan Thanabalasingam, an identity and behavioural coach, content creator, public speaker, and a counsellor (supplied); Right:Futuristic AI therapy chatbot digital interface with glowing cyan hexagon grid, medical icons, brain neural network, stethoscope and healthcare symbols on dark technology background. Artificial intelligence in healthcare, telemedicine, mental health support and smart medical diagnosis concept. Source: iStockphoto / herstockart/Getty Images

அமெரிக்கா முழுவதும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 12 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் சுமார் 20 சதவீதமானோர் (19.2% பேர்), சோகம், கோபம், பதற்றம் அல்லது மன அழுத்தத்தை உணரும்போது ChatGPT, Gemini, Character.AI மற்றும் Meta AI போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) chatbotsஐப் பயன்படுத்தி ஆலோசனை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். முந்தைய ஆண்டில் இந்த அளவு 13.1% ஆக இருந்தது; அதேவேளையில், மனநல நிபுணரிடம் ஆலோசனை பெற்றதாகக் கூறியவர்களின் விகிதம் 19.8% ஆக இருந்தது. எனவே, அந்த வயதுப் பிரிவினரைப் பொறுத்தவரை, chatbots பயன்பாடு மனித நிபுணரை அணுகுவதற்கு இணையான நிலையை எட்டியுள்ளது; மேலும், AI பயன்பாடே வேகமாக அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனங்கள் இது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. முறையான மதிப்பீடு இன்றி AI மற்றும் டிஜிட்டல் மனநலக் கருவிகள் அறிமுகப்படுத்தப்படுவதால் ஆஸ்திரேலியர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஆஸ்திரேலிய உளவியல் சங்கம் (Australian Psychological Society) எச்சரித்துள்ளது. நெருக்கடி கால கையாளுதல் மற்றும் பாதுகாப்பு குறித்த சர்வதேச மருத்துவக் கவலைகளையும் இது எதிரொலிக்கிறது. MyGov நிறுவனம் அண்மையில் நடத்திய ஒரு சிறு ஆய்வில், நம்நாட்டில் உணர்வுபூர்வமான ஆதரவுக்காக AI chatbotsகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கண்டறிந்துள்ளது. இருப்பினும், இது மனித நிபுணர்களை அணுகுவோரின் எண்ணிக்கையை இன்னும் முழுமையாக முந்தவில்லை என்று தற்போதைய சிறந்த தேசியத் தரவுகள் கூறுகின்றன. அதேவேளையில், மனநல நிபுணர்களை அணுகுவோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அடையாளம் மற்றும் நடத்தை சார்ந்த பயிற்சியாளரும் (identity and behavioural coach), உள்ளடக்கத்தை உருவாக்குபவரும், பேச்சாளரும், உளவியல் ஆலோசகருமான கௌரிஹரன் தனபாலசிங்கம் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

நேயர்களே, இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இவற்றை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து நீங்கள் தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Can AI chatbots replace counsellors?

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now