அகதிகள் குறித்த ஐக்கியநாடுகளின் தீர்மானங்கள், அதன் வரலாறு என்பன பற்றியும் ஆஸ்திரேலிய அரசியலில் அகதிகள் பந்தாடப்படவது பற்றியும் ஆஸ்திரேலிய தமிழ் காங்ரஸ் அமைப்பைச் சார்ந்த பாலா விக்னேஸ்வரனுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
உள்நாட்டு அரசியலுக்காக ஆஸ்திரேலியா புறமுதுகு காட்டி ஓடமுடியுமா?
Bala Vigneswaran
ஆஸ்திரேலியா அண்மையில் பப்புவா நியூ கினியுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையின்படி, ஆஸ்திரேலியாவிற்குப் படகுமூலம் புகலிடம் தேடி வருபவர்கள், பப்புவா நியூகினி நாட்டில் குடியேற்றப்படுவார்கள். இந்த உடன்படிக்கை மூலம் ஆஸ்திரேலியா அகதிகள் தொடர்பான கொள்கையில் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
Share