Asang Wankhede சாதி பாகுபாட்டிற்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர். இந்தியாவில் 'தீண்டக்கூடாதவர்கள்' எனக் கருதப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
சாதி ஒரு சமூக அடுக்குமுறை என்று அவர் கூறுகிறார்.
பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட நிலை உங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த நிலையைக் கடந்து செல்ல முடியாது.
ஆஸ்திரேலியாவில் சாதி பாகுபாடு குறித்த ஆராய்ச்சியை வழிநடத்தியுள்ள Asang Wankhede ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் உள்ள தலித் பின்னணி கொண்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பணியிடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் சாதி பாகுபாடு பற்றிய பொதுவான கதைகளை அவர் கண்டறிந்தார்.
ஆஸ்திரேலியாவில் சாதி பாகுபாடு இப்போது வரை அமைதியாக செயல்பட்டு வருகிறது.
ஆனால் ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையகம் மற்றும் பிற நிறுவனங்களும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிராக சட்டப் பாதுகாப்புகளுக்கு வழிவகுக்க ஆரம்பித்துள்ளன.
SBS Examines - இற்காக Nick Zoumboulis ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.




