இந்த நிலையை சமாளிக்க இத்தாலி நாட்டிற்கு உதவத் தவறியதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று செயற்குழுவான, ஐரோப்பிய ஆணையம் (European Commission) மன்னிப்புக் கோரியுள்ளது.
இதே வேளை, நாட்டில் குடியுரிமை விழாக்களை நடத்த வேண்டாம் என்று உள்ளூராட்சி சபைகள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளன.
இதனால், பலருக்குத் தமது புதிய குடியுரிமை சான்றிதழைப் பெற முடியவில்லை. அதனை பெற,
புதிய வழிமுறை எதையும் உள்துறை அமைச்சு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இவை குறித்து Stephanie Corsetti, Peggy Giakoumelos, மற்றும் John Baldock எழுதிய விவரணங்களின் அடிப்படையில், தமிழில் ஒரு விவரணத்தைத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
கொரோனா வைரஸ் குறித்த அனைத்து செய்திகளையும் தமிழில் அறிந்து கொள்ள sbs.com.au/language/tamil/coronavirus-updates என்ற இணையத் தளத்திற்கு செல்லவும்.



