கொரோனா வைரஸ் COVID-19 தொற்று நோய் பரவுவதைத் தடுக்க அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
தனிமைப்படுத்தும் விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்கும் சாதனங்களை அறிமுகப்படுத்த மேற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு திட்டமிடுகிறது. இந்தக் கடுமையான புதிய சட்டங்கள் தனிமனித உரிமைகளை மீறுகின்றன என்று அச்சங்கள் வெளியாகின்றன.
இதே வேளை, ஏற்கனவே ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறும் World Health Organisation - உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பரவுவதை அரசியல் மயமாக்க வேண்டாம் என்று உலக தலைவர்களிடம் கோரியுள்ளது.
இவை குறித்து, SBS செய்திப் பிரிவின் Jen Scherer, Aaron Fernandes, Jennifer Luu, Abbie O’Brien, Stephanie Corsetti, மற்றும் Amelia Dunn ஆகியோர் எழுதிய விவரணங்களைக் கொண்டு, தமிழில் ஒரு விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.



