கொரோனா வைரஸ் COVID-19 தொற்று குறித்து SBS செய்திப் பிரிவின் Bernadette Clarke, Cassandra Ban, Greg Dyett, மற்றும் Allan Lee எழுதிய விவரணங்களின் அடிப்படையில், தமிழில் ஒரு விவரணம் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
கொரோனா: இன்றைய முக்கிய தகவல்கள்

An employee and a patient at an intensive care unit Source: AAP
COVID-19 தொற்று நோயிலிருந்து நாம் படிப்படியாகத் தப்பி, எமது அன்றாட வாழ்க்கையிலுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படத் தொடங்கியிருந்தாலும், கொரோனா வைரஸ் இன்னமும் பரவலாக உள்ளது. மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க நாங்கள் அறிவுறுத்தப்படுகிறோம். இந்த நிலை மாறிவிடும். ஆனால், அது எவ்வளவு வேகத்தில் மாறும் என்பது நாங்கள் எல்லோரும் என்ன செய்கிறோம் என்பதில் தங்கியுள்ளது என்று சொல்லப்படுகிறது.
Share