SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
239 பேருடன் மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன நடந்திருக்கும்?

மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கிளம்பிச் சென்ற MH370 எனும் Malaysian Airlines பயணிகள் விமானம் நடுவானில் காணாமற்போன 10 ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த வாரம் (மார்ச் 8) நினைவுகூரப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த 7 ஆஸ்திரேலியர்கள் உட்பட 227 பயணிகளும், 12 விமான பணியாளர்களும் என்ன ஆனார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்ற மர்மம் இன்றுவரை நீடிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில விளக்கங்களை முன்வைக்கிறார் பிரிட்டனில் விமான எந்திர இயக்கம் குறித்த பொறியியல் கல்வியில் முதுகலை பட்டம் பெற்ற பாக்யஸ்ரீ அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Share