ஆஸ்திரேலியர்கள் பசுமையான இடங்களுக்கு அதிக மதிப்பைக் கொடுக்கிறார்கள். தாவர வாழ்க்கையின் தனிப்பட்ட, சமூக மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் ஆழமானவை.
இதனால்தான் நமது தோட்டங்களிலும் தெருக்களிலும் நம்மால் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை வழிகாட்டும் வகையில் விதிமுறைகள் உள்ளன.

நீங்கள் சொந்த வீட்டில் வாசிக்கிறீர்காளா அல்லது வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா என்பதைப் பொருட்படுத்தாமல், உங்கள் வீட்டைச் சுற்றி தாவரங்களை வளர்ப்பதில் பல நன்மைகள் உள்ளன.
செடிகளுடன் வேலை செய்வது அனைவருக்கும் நல்லது. ஆனால் நகரங்களில் நாம் வசிக்கும் போது நாம் அதிலிருந்து விலகிச் செல்ல முனைகிறோம், ஆனால் இயற்கை உலகில் தாவரங்களால் சூழப்பட்டிருக்கும்போது நாம் மிகவும் நன்றாக உணர்கிறோம் என்பதை நாம் எப்போதும் அறிவோம் என்று கூறுகிறார் தோட்டக்கலை நிபுணர் Justin Calverley.
தாவரங்களை வளர்ப்பது நமக்கு நிழல் மற்றும் குளிர்ச்சியை தருவதோடு நமக்கு சுத்தமான காற்றையும் தருகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு, அவர்களின் தாய்நாட்டு சூழலுக்கு வெளியே ஒரு பழக்கமான தாவரத்தைப் பார்ப்பதில் அவர்களை அவர்களின் தாய்நாட்டு நினைவுக்கு கொண்டு சென்று பரவசப்படுத்தும். சில வகை தாவரங்கள் நமது குழந்தைக்கால நினைவை கொண்டு வரும் என்று திரு Calverley கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவில், நமது நகர்ப்புற மர விதானம் தொடர்பான முடிவுகளை வழிகாட்ட, நாடு முழுவதும் மரம் பாதுகாப்பு உத்தரவுகள் உள்ளன.

Marcus Pearl மெல்பனில் உள்ள Port Phillip நகரின் மேயராவார்.
பெரும்பாலான நகர பகுதிகளில் திறந்தவெளி குறைவாக இருப்பதால், அங்குள்ள மரங்கள் வனவிலங்குகள், நமது சமூக வசதிகள் மற்றும் நமது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. எனவே, நகரவாசிகள் தனியார் தோட்டங்களில் உள்ள குறிப்பிடத்தக்க மரங்களை அகற்றுவதற்கு முன் கவுன்சிலின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறுகிறார்.
நகரங்களில் உள்ள மரங்களின் அளவு மற்றும் அது வழங்கும் நிழல் போன்றவற்றை பாதுகாக்கும் பொருட்டு மரங்களை அகற்றுவது குறித்து அப்பகுதி நகரசபை வெவ்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. பிராந்திய கிராம பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் பொறுத்து அக்கட்டுப்பாடுகள் வித்தியாசப்படும் என்று கூறுகிறார் மேயர் Marcus Pearl.

உங்களிடம் சொந்தமாக தோட்டம் இல்லையென்றால், உங்கள் வீட்டிற்கு அருகில் பகிரப்பட்ட அல்லது கவுன்சில் இடங்களை நீங்கள் பயன்படுத்தலாம். Port Phillip நகரத்தில் வசிப்பவர்கள் இத்தகைய முயற்சியை முன்னெடுத்து வருகின்றனர்.
பல நகரங்களைப் போலவே, Port Phillip நகரத்திலும் குறைந்த திறந்தவெளியே உள்ளது. அங்கு வசிக்கும் உள்ளூர்வாசிகள் கவுன்சிலிற்கு சொந்தமான பொது இடங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிட்டு அந்நகரை மேம்படுத்தி வருகின்றனர் என்று கூறுகிறார் மேயர் Marcus Pearl.
கோவிட் காலங்களில் இதில் மக்களின் பங்களிப்பு அதிகமாக இருந்ததாகவும் கூறுகிறார் மேயர் Pearl.
வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் என்ன செய்யலாம்
வாடகை வீட்டில் வசிப்பவர்களும் தாங்கள் வசிக்கும் வீட்டின் முன்புறம், பின்புறம் உள்ள புற்களை வெட்டுவது மற்றும் தோட்டத்தை பராமரிப்பது போன்ற கடமைகள் உள்ளன.
ஆனால் அதனை தாண்டி வீட்டுத்தோட்டத்தில் மரங்களை நடவோ அல்லது அகற்றவோ விட்டு உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும் அதுமட்டுமல்ல அவ்வாறு அவர்கள் நடும் மரங்கள் இரண்டு மூன்று மீட்டர் வளர்ந்து அயலவர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக இருக்கவும் கூடாது என்று கூறுகிறார் சிட்னி சொத்து மேலாளர் Iggy Damiani.

உங்கள் கவுன்சிலுக்கு சொந்தமான இடத்தில் நீங்கள் செடிகள் பயிரிட அனுமதி இல்லையென்றால் அல்லது உங்களுக்கு சொந்தமான இடத்திலும் குறைவான நிலம் இருந்தாலும் உங்களுக்கு பிடித்தமான செடிகளை தொடர்ந்து தொட்டியில் வளர்க்கலாம்.
தொட்டியில் செடிகளை வளர்ப்பதில் பல நன்மைகள் மற்றும் வசத்தில் உள்ளன. நீங்கள் வீடு மாறும் போது தொட்டியில் வளர்க்கும் செடிகளை உங்களோடு கொண்டு செல்லலாம் என்று கூறுகிறார் தோட்டக்கலை நிபுணர் Justin Calverley.
மரங்கள் மற்றும் செடிகளை வளர்பதினால் பசுமையான சூழலில் வாழலாம் என்பதுடன் அதனை பராமரிப்பதில் உடற்பயிற்சி செய்யலாம் அதோடு சூரிய கதிர்வீச்சிலிருந்து வைட்டமின் D பெற்றுக்கொள்ளலாம் என்று ஊக்குவிக்கிறார் Justin Calverley.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.






