மலேசியா வாழ் ஈழத் தமிழ் அகதிகள் - இன்னல்களின் மறு முகம்

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இதுவரை, ஆயிரக் கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து மலேசியா சென்றுள்ளனர். மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது எதிர்காலம் என்னவென்று தெரியாது வாழ்ந்துவரும் அவர்களின் குழந்தைகளின் கல்விச் செல்வத்தை காக்கும் நோக்குடன் CHILD எனும் அமைப்பினூடாக, 2010ம் ஆண்டில் இருந்து TFM - Tamil Forum Malaysia - மலேசியா தமிழர் பேரவை, ஈழத் தமிழ் அகதிக் குழந்தைகளுக்கான இலவச பாடசாலையை ஆரம்பித்து நடத்தி வருவதுடன், யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் பல திட்டங்களையும் செயற்படுத்தி வருகிறது. அந்த அமைப்பின் Dr குணா ஐங்கரன் அவர்களை, மகேஸ்வரன் பிரபாகரன் மலேசியா சென்றிருந்த போது அப் பாடசாலை சென்று சந்தித்து உரையாடியுள்ளார் . மலேசியா வாழ் தமிழ் அகதிகளின் '3f????நிலைமை, தமது_ பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களின் பின்னணி போன்றவற்றை Dr குணா ஐங்கரன் அவர்கள் விபரிக்கிறார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மேலதிக படங்களை எமது facebook (Facebook.com/SBSTamil) பக்கத்தில் பார்க்கலாம். Child Information, Learning & Development Centre
Share