SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
El Niño: ஒவ்வாமைகளால் அவதிப்படுபவர்கள் தம்மை எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம்?

An El Niño weather event could mean an earlier start to Australia's allergy season in 2023. Credit: Getty / Raquel Arocena Torres. Inset Dr Sharmila Sureshkumar
ஆஸ்திரேலியா தற்போது எல் நினோ எனப்படுகின்ற நிலைக்குள் நுழைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அண்மையில் உத்தியோகப்பூர்வமாக பிரகடனப்படுத்தியிருந்தமை நாமறிந்த செய்தி. எல் நினோ வெப்பமான, வறண்ட வானிலையுடன் தொடர்புடையது என்பதால் இது நாடு முழுவதும் காட்டுத்தீ அபாயத்தை அதிகரிக்கும் என்று அவசர சேவைகள் அஞ்சுகின்றன. காட்டுத்தீ அபாயம் ஒருபுறம் இருக்க வசந்த காலத்தில் ஒவ்வாமைகளால் அவதிப்படுபவர்களுக்கு தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள எல் நினோ நிலைமை எதை அர்த்தப்படுத்துகிறது என்பது தொடர்பிலும் அவர்கள் இந்தக் காலப்பகுதியில் அவதானமாகவிருக்க என்ன செய்ய வேண்டுமென்பது தொடர்பிலும் மெல்பனில் குடும்ப மருத்துவராகக் கடமையாற்றும் Dr சர்மிளா சுரேஷ்குமாரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share