ஆஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்கள் அமைப்பு, தமது மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு நிதி சேகரிக்கும் நோக்குடன் 'எந்திர மாலை' எனும் கலை நிகழ்வினை வருடந்தோறும் நடத்திவருகின்றது. அந்த வகையில், இவ்வருட நிகழ்வானது இம்மாதம் 15ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு Blacktown இல் அமைந்துள்ள Bowman மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்கள் அமைப்புப் பற்றியும், அந்த அமைப்புச் செயற்படுத்தி வருகின்ற மனிதாபிமான உதவித் திட்டங்கள் பற்றியும், நடைபெறவுள்ள கலை நிகழ்வு பற்றியும் ஆஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்கள் அமைப்பின் திரு நாகேஸ்வரன், திரு சிறிதரன், திரு சாந்தசீலன் ஆகியோர் மகேஸ்வரன் பிரபாகரனுடன் உரையாடுகிறார்கள்.