எல்லோரும் சேர்ந்து பேசுவார்கள்... செய்பவர்கள் ஒரு சிலரே!
SBS Tamil Source: SBS Tamil
தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகு தழுவிய ஒரு இயக்கமாகும். பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் தமிழ் மொழியாகவும், அதன் இலக்கியமாகவும், அதன் கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. ஓலைசுவடிகளில் பதிவுற்ற இலக்கியத்தையும், மக்களிடையே ஒழிந்திருக்கும் கலை வளங்களையும் கணினி சார்ந்த தொழில்நுட்பத் திறனுடன் நிரந்தரப் படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கும் முனைவர் K சுபாஷினி அவர்கள், தனது செயற்பாடுகள் குறைத்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.பார்க்க: http://www.tamilheritage.org/
Share