SKIP TO MAIN CONTENT

தீயணைப்புப் படையிலுள்ள தமிழர் ஒருவரின் அனுபவம்

Ranjith with fellow volunteer firefighters celebrating Christmas, 2019
Ranjith with fellow volunteer firefighters celebrating Christmas, 2019 Source: RFS, Dural

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நூற்றுக்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. மூன்று இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் உட்பட இது வரை 23 பேர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான வன விலங்குகள் மட்டுமல்ல, கால்நடைகளும் இந்தக் காட்டுத்தீக்கு இரையாகியுள்ளன.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நூற்றுக்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. மூன்று இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் உட்பட இது வரை 23 பேர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான வன விலங்குகள் மட்டுமல்ல, கால்நடைகளும் இந்தக் காட்டுத்தீக்கு இரையாகியுள்ளன.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும் Rural Fire Service என்ற தீயணைப்புத் துறை இயங்குகிறது.  NSW மாநிலத்தில் மட்டும் சுமார் 74 ஆயிரம் பேர் Rural Fire Service என்ற தீயணைப்புத் துறையில் பணியாற்றுகிறார்கள்.  அவர்களில் 911 பேர் மட்டுமே அவர்கள் சேவைக்கு சம்பளம் பெறுகிறார்கள்.  மற்றவர்கள் அனைவரும் தன்னார்வத் தொண்டர்கள்.  அவர்களில் ஒருவர், ரஞ்சித். 

தீயணைப்புப் படையில் இணைந்தது ஏன் என்றும், அதில் அவர் கண்ட அனுபவங்கள் குறித்தும், இதில் நாம் எப்படி இணையலாம் என்பது குறித்தும், குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார் ரஞ்சித்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now