SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நாடு திரும்ப மறுத்தால் சிறையில் அடைப்பது குறித்த விவாதம்!

Tamil Selvan, Abishek and Renuka
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களின் புகலிடகோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பவேண்டும். ஆனால் அப்படி அவர்கள் சொந்த நாடு திரும்ப மறுத்தால் அவர்களை சிறைக்கு அனுப்ப அரசுக்கு அதிகாரம் தரும் சட்ட முன்வடிவை ஆளும் லேபர் அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. இந்த பின்னணியில், புகலிடம் கோரிக்கையாளர்களான தமிழ் செல்வன் மற்றும் அபிஷேக் ஆகியோரையும், தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் ரேணுகா இன்பக்குமார் அவர்களையும் நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்திக்கிறோம். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
Share