SKIP TO MAIN CONTENT

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு- பலி எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு- 27 பேர் வெளிநாட்டவர்!

SBS
Source: SBS

இலங்கையில் நட்சத்திரவிடுதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ள அதேநேரம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 450-க்கும் அதிகம் என செய்திகள் கூறுகின்றன. ஈஸ்டர் தினமான இன்று ஏறக்குறைய ஒரேநேரத்தில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கட்டானையில் உள்ள தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், கொழும்பிலுள்ள சினமன் க்ராண்ட், கிங்ஸ்பெரி, சங்ரிலா ஆகிய 3 நட்சத்திரவிடுதிகளிலும் தெஹிவளை மற்றும் தெமட்டகொட பகுதிகளிலும் இவ்வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பலியானவர்களில் 27 பேர் வெளிநாட்டவர்கள் என குறிப்பிடப்படுகிறது. இந்த குண்டு வெடிப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்கள் என கூறப்படுகிறது. இதேவேளை இன்றைய தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையிலிருந்து வெளிவரும் 'ஊடகன்' பத்திரிகையின் செய்தி ஆசிரியராக கடமையாற்றும் திரு.இந்திரஜித்துடன் உரையாடுகிறார் றேனுகா. (இந்த நேர்காணல் பதிவுசெய்யப்பட்டபோது 6 தாக்குதல்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன).

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now