ஆஸ்திரேலிய குடிவரவுக் கொள்கையில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் எவை?

Source: SBS
ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா உள்வாங்கும் நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை முப்பதினாயிரம் பேரினால் குறைக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. பிரதான நகரங்களில் ஏற்பட்டுள்ள சன நெருக்கடி மற்றும் நகரக்கட்டுமானங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய அத்தியாவசிய சேவை விரிவாக்கம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு முக்கிய குடிவரவுக்கொள்கைகளில் திருத்தம் கொண்டுவந்துள்ள ஆஸ்திரேலிய அரசு, அதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது. இது குறித்து விளக்குகிறார் ஊடகவியலாளரும் அரசியல் அவதானியுமான நவரட்ணம் ரகுராம் அவர்கள்.
Share



