துணையைத் தேடுவது கடினமான காரியம்
Krissy Nicholson
."tsunami and the Single Girl" என்ற நூலை எழுதியுள்ள Krissy Nicholson அவர்கள் அடிப்படையில் ஒரு உதவிப் பணியாளர். Krissy Nicholson அவர்களை, அவரது நூல் பற்றியும் அவரது அனுபவங்கள் பற்றியும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் சந்தித்து உரையாடுகிறார். கேள்விகள் தமிழிலும் பதில்கள் ஆங்கிலத்திலும் அமைந்துள்ளன.உதவிப் பணியாளராகப் பணிபுரியும் Krissy Nicholson அவர்கள் சந்தித்த பாரிய அழிவு, 2004ல் ஏற்பட்ட சுனாமி. அதன்பொழுது அவர் இலங்கைத் தீவிற்குச் சென்று ஒரு வருடகாலம் தங்கியிருந்து நிவாரணம் மற்றும் கட்டுமான அபிவிருத்தி வேலைகளை மேற்பார்வை செய்தார். உதவிப்பணி புரிவதற்காகப் பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ள இவர், அங்கு தான் சந்தித்த அநுபவங்களையும் சவால்களையும் தான் எப்படி ஒரு தோதான துணையைத் தேடினார் என்பதோடு புனைந்து அழகுற எழுதியுள்ளார்.கடந்த பத்தாண்டுகளாக, அவர் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் முழுவதும் எட்டு நாடுகளில் பேரழிவு நிவாரண பணியில் ஈடுபட்டபோது பல்வேறு வகையான அநுபவங்களைச் சந்தித்துள்ளார். உதவிப் பணிபுரிய நினைக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய இந்த நூல், Krissy Nicholson அவர்கள் எழுதிய முதல் புத்தகம்.ஆஸ்திரேலியாவிலுள்ள அனைத்துப் புத்தக நிலையங்களிலும் இணையத்தளமூடாகவும் இந்நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.
Share