இந்த விவரணத்தில், பூர்வீகக் குடிமக்களின் ஃபேஷனை தனித்துவமாக்குவது என்ன, அது சுற்றுச்சூழலுடன் எப்படி இணைகிறது, மேலும் அந்த வடிவமைப்பாளர்களை நீங்கள் எவ்வாறு ஆதரிக்கலாம் என்பது குறித்து அறியலாம்.
காலனித்துவத்திற்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்கள் தங்களது சூழல், காலநிலை மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற உடைகளை உருவாக்கியிருந்தனர்.
ஒருவர் அணிந்திருந்த உடைகள் அவர் யார், அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர், அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டும்.
இன்றும் பல பூர்வீகக் குடி பின்னணி கொண்ட வடிவமைப்பாளர்கள் ஃபேஷனை ஒரு கதையை, கலாசாரத்தை மற்றும் ‘‘Country’’ என்ற கருத்தை அன்றாட வாழ்க்கைக்கு கொண்டு வரும் ஒரு வழியாக பார்க்கின்றனர்.
நீண்ட காலமாக அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு பின்னணி கொண்டவர்களின் ஃபேஷன் பிரதான ஊடகங்களில் பெரிதாகக் காணப்படவில்லை.

மிஷன்கள், பள்ளிகள் மற்றும் அரச கொள்கைகள் வழியாக மேலைநாட்டு உடை பாணிகள் திணிக்கப்பட்டன. அதே நேரத்தில் பூர்வீகக் குடி பின்னணி கொண்ட மக்கள் தங்களது பாரம்பரிய உடை கலாசாரத்தை சமூகங்களிலும் விழாக்களிலும் பாதுகாத்து வந்தனர்.
ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது.
இந்த மாற்றத்தை நேரடியாகக் கண்டவர்களில் ஒருவர் Dunghutti மற்றும் Anaiwan படைப்பாற்றல் கலைஞர் Yatu Widders Hunt.
அவர் Aus Indigenous Fashion என்ற ஆன்லைன் சமூகத்தின் நிறுவனர் ஆவார்.
இன்று பூர்வீகக் குடி பின்னணி கொண்ட வடிவமைப்பாளர்கள், மாடல்கள் மற்றும் கலைஞர்கள் ஃபேஷன் உலகில் அதிகமாகத் தெரிவதைக் காணலாம் — ஆனால் அவர்களுடைய சொந்த விதிமுறைகளின் அடிப்படையில் அவர்கள் இயங்குகிறார்கள் என்கிறார் Whadjuk Noongar சமூகத்தைச் சேர்ந்த மாடல் Nathan McGuirein. இவர் Mob in Fashion அமைப்பின் நிறுவனர்.

அப்படியானால், பூர்வீகக் குடி மக்களின் ஃபேஷன் எவ்வாறு வேறுபடுகிறது?
பல பூர்வீகக்குடி ஃபேஷன் பிராண்டுகள் தங்களை “கதையை மையமாகக் கொண்டவை” அல்லது “Country உடன் இணைந்தவை” என்று விவரிக்கின்றன.
இங்கு “Country” என்பது நிலம், நீர், வானம், சமூகங்கள் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை குறிக்கும்.
பல வடிவமைப்புகள் குறிப்பிட்ட இடங்கள், மொழிகள் அல்லது கலாசார கருப்பொருட்களுடன் தொடர்புடையவை.
பிரிண்ட்கள் பெரும்பாலும் பூர்வீகக் குடி பின்னணி கொண்ட கலைஞர்களின் ஓவியங்களிலிருந்து பெறப்படுகின்றன — அவர்களுக்கு அங்கீகாரமும் சம்பளமும் வழங்கப்படுகிறது.
பல பிராண்டுகள் சிறிய அளவிலான தொகுப்புகளை மெதுவாக வெளியிடுகின்றன. இது நிலைத்தன்மை மற்றும் தரத்தை பேணுவதற்கு உதவுகிறது.
இந்த அணுகுமுறையை பின்பற்றும் வடிவமைப்பாளர்களில் ஒருவர் Yolŋu சமூகத்தைச் சேர்ந்த creative director Liandra Gaykamangu.
அவர் Liandra என்ற resort wear பிராண்டின் உரிமையாளர் ஆவார்.
ஆரம்பம் முதலே தங்கள் சொந்த பிரிண்ட்களை உருவாக்கி வருவதாகவும் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒரு கருப்பொருள் இருக்கும் எனவும் அவர் சொல்கிறார்.

ஒரு பொருளின் லேபிள் அல்லது இணையதளத்தைப் பார்க்கும்போது, அந்த வடிவமைப்பின் பின்னால் உள்ள Country அல்லது சமூகத்தின் கதையை நீங்கள் காணலாம்.
பாரம்பரியமாக, பூர்வீகக் குடி பின்னணி கொண்ட மக்களின் உடை தயாரிப்பு முறைகள் தேவையான அளவு பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு மரியாதை காட்டும் வகையில் இருந்தன.
இன்று பல பூர்வீகக் குடி பின்னணி கொண்டவர்களின் பிராண்டுகள் இந்த கருத்துகளை நவீன ஃபேஷனில் இணைக்கின்றன.
அவை மேம்பட்ட பொருட்களைத் தேர்வு செய்து, கழிவுகளை குறைத்து, பெரிய அளவில் உற்பத்தியைத் தவிர்த்து, கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் நியாயமான உறவுகளை உருவாக்குகின்றன.
பூர்வீகக் குடி பின்னணி கொண்டவர்களின் பிராண்டுகளை வாங்குவது வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை கலாசாரத்தையும் சுற்றுச்சூழலையும் ஒரே நேரத்தில் ஆதரிக்கும் ஒரு வழியாகும்.
பூர்வீகக் குடிமக்களின் ஃபேஷன் வேலை வாய்ப்புகளையும் திறன் மேம்பாட்டையும் உருவாக்குகிறது.
அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு பின்னணி கொண்டவர்களுக்குச் சொந்தமான பிராண்டுகள்- வடிவமைப்பாளர்கள், மாடல்கள், ஸ்டைலிஸ்ட்கள், புகைப்படக் கலைஞர்கள், பேட்டர்ன் மேக்கர்கள் மற்றும் உற்பத்தி குழுக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
Liandra தனது பிராண்டின் மூலம் தொலைதூர மற்றும் பிராந்திய சமூகங்களை ஃபேஷன் துறையுடன் இணைக்க முயற்சிக்கிறார்.

பல தொழில்களிலிருந்து விலக்கப்பட்ட சமூகங்களுக்கு, இந்த வகையான பயிற்சி மற்றும் ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் உறுதியான தொழில் வாழ்க்கையை உருவாக்க உதவுகின்றன.
தேசிய அளவில் பூர்வீகக்குடி மக்களின் வணிகங்கள் ஏற்கனவே பொருளாதாரத்தின் முக்கியமான பகுதியாக உள்ளன என்கிறார் Yatu Widders Hunt.
நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு புதிதாக வந்தவராக இருந்தால், ஒரு கேள்வி எழலாம்:
பூர்வீகக்குடி மக்களின் ஃபேஷனை மரியாதையுடன் எப்படி அணுகலாம்? இதற்கு சில எளிய வழிகள் உள்ளன.
பல பூர்வீகக்குடி மக்களின் பிராண்டுகள் “ally friendly” என்று குறிப்பிடுகின்றன — அதாவது அந்த வடிவமைப்புகளை யாரும் அணியலாம் என்பதைக் குறிக்கும்.
குறிப்பிட்ட விழாக்கள் அல்லது குறிப்பிட்ட கலாச்சாரத்துடன் தொடர்புடைய சில பொருட்கள், அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கு மட்டும் உரியவையாக இருக்கும். இவை அந்தந்த தயாரிப்புகளில் பொதுவாக தெளிவாகக் குறிப்பிடப்படும்.
பல பிராண்டுகள் கலைஞர், சமூகம் மற்றும் வடிவமைப்பின் பின்னணி கதைகள் பற்றிய தகவல்களையும் பகிர்கின்றன.
அதை லேபிளில் அல்லது இணையத்தில் பார்க்கலாம் எனக்கூறும் Yatu Widders Hunt பூர்வீகக்குடிமக்களின் கதைகள் ஆஸ்திரேலிய அடையாளத்தின் மையமாக உள்ளன என வலியுறுத்துகிறார்.

இதேவேளை புதிய குடியேறிகள் பூர்வீகக்குடி சமூகங்களுடன் இணைவதற்கான ஒரு சுவாரஸ்யமான வழியாக ஃபேஷனைப் பார்க்கிறார் Nathan McGuire.
இந்த பூர்வீகக்குடி மக்களின் பேஷன் உலகத்தை அறியத் தொடங்க, அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு பின்னணி கொண்டவர்களுக்குச் சொந்தமான பிராண்டுகளின் வடிவமைப்பாளர்கள் மற்றும் மாடல்களை சமூக ஊடகங்களில் பின்தொடரலாம், அல்லது பூர்வீகக்குடி மக்களின் ஃபேஷன் runway நிகழ்ச்சிகள் அல்லது கண்காட்சிகளில் கலந்து கொள்ளலாம்.
அல்லது பூர்வீகக்குடி பின்னணிகொண்ட உரிமையாளர்களின் பிராண்டுகளில் இருந்து, குறிப்பாக “யடடல கசநைனெடல” என்று குறிக்கப்பட்ட பொருட்களை வாங்கலாம்.
இது நாம் அணியும் உடைகள் மூலம் — இந்த நாட்டின் ஆழமான கதைகளை அறியும் ஒரு வழியாகும்.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand








