இந்தியப் பார்வை

Source: SBS Tamil
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரத்தில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சேகா் ரெட்டி தொடர்பான வழக்கை முடித்து வைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதே நேரம் திமுகவினருக்கு எதிரான 2ஜி வழக்கில், நீதிமன்றம் அனைவரையும் விடுவித்ததை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. மேலும் 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் அவை கோரிக்கை வைத்தன. இதன்படி வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் தினமும் வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Share