SBS Examines : சீக்கியர்கள் பாகுபாட்டை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?

Sikh Header.png

Sikhism is a fast-growing religion in Australia, but remains poorly understood. Credit: Avani Rai

சீக்கிய மதம் உலகின் ஐந்தாவது பெரிய மதம், மேலும் ஆஸ்திரேலியாவின் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், வேகமாக வளர்ந்து வரும் மதக் குழுவாக சீக்கிய மதம் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவில் வாழும் சீக்கியர்கள் இன்னும் பாகுபாடு மற்றும் அவர்கள் குறித்து தவறான எண்ணங்கள் நிலவும் சூழலில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார் Sikh Interfaith Council of Victoriaவின் தலைவர் Jasbir Singh Suropada

சில நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்தவரைக் கண்டாலோ, தாடியை பார்த்தாலோ உடனே ஒரு பாகுபாடு உண்டாகிறது
Jasbir Singh Suropada, Chairperson of the Sikh Interfaith Council of Victoria

Gurinder Kaur, 2006-இல் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்ததிலிருந்து, தனது உள்ளூர் சமூகத்தில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் சில சமயங்களில், தனது சீக்கிய அடையாளத்தினால் மக்கள் தன்னை வேறுபடுத்தி நடத்துவதாக அவர் உணர்ந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன், Udaybir Singh தனது மகன் பள்ளியில் சேரும் போது புதிய சூழலுக்கு எவ்வாறு பழகுவான் என்று கவலைப்பட்டார்.

“அந்த பள்ளியில் தலைப்பாகை அணிந்த ஒரே குழந்தை என் மகன்தான் — மற்ற குழந்தைகள் இதற்கு முன்பு இப்படியான தலைமுடி அலங்காரம் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்” என்கிறார் Udaybir Singh

SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Nick Zoumboulis

எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்கிறார் செல்வி.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now