இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து அதிபர் ரணில் விக்கிரமசிங்க பேசியுள்ளார். இங்கு தமிழ் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்களை வழங்கியுள்ள அதிபர் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் பதில் தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சந்திப்பில் பல்வேறு தலைவர்களும் தமது ஆலோசனைகளை முன்வந்துள்ளார்கள்.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





