இலங்கையில் இடம்பெற்ற சுமார் 30 வருட கால யுத்தத்தின் போது உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள். யுத்தம் முடிந்து 14 வருடங்கள் நெருக்குகின்றபோதிலும் இன்னும் உள்நாட்டிலும், தமிழகம் உள்ளிட்ட இடங்களிலும் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இராணுவம் தமது இடங்களில் நிலை கொண்டிருப்பதாலும் மற்றும் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுள்மையாலும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் மக்கள் வாழ்கின்றார்கள். படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அங்கு சென்று வாழ முடியாத நிலையில் ஒரு பகுதி மக்கள் உள்ளார்கள்.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





