வடமாகாணம் உள்ளிட்ட இலங்கையின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழையுடன் கூடிய வானிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினை தாண்டியுள்ளது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 88 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல வீடுகளும் சேதடைந்துள்ளன.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமதுtune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.