மாற்றுத்திறனாளி என்பதற்காக, அல்லது அவர்கள் சமூகத்தில் பழகும் விதத்திற்காக, ஒருவரை எதிர்மறையாக மதிப்பதே திறன்சார் பாகுபாடு ஆகும்.
மாற்றுத்திறனாளிகள் கிட்டத்தட்ட இரட்டிப்பு விகிதத்தில் பகைமையும் வன்முறையும் அனுபவிக்கிறார்கள். அது குறித்த முறைப்பாடுகள் சரியாக பதிவு செய்யப்படுவதில்லை. ஏனெனில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் அனுபவிப்பதைக் முறைபாடுசெய்யும் அமைப்புகள் அவர்களுக்கு உண்மையில் எளிதில் அணுகக்கூடியதாக இல்லை என்று People with Disability Australia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Megan Spindler Smith கூறுகிறார்.
மாற்றுத்திறனாளிகள் மீதான சில வகையான பாகுபாடு வெளிப்படையாக தீங்கு செய்வதுபோலத் தெரியாவிட்டாலும், அவை இன்னும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கூறுகிறார் மாற்றுத்திறனாளி Husna Amani
SBS Examines வழங்கும் Understanding Hate வெறுப்பை புரிந்து கொள்ளுதல் தொடரில் இந்த அத்தியாயத்தில், நாம் மாற்றுத்திறனாளர்கள் மீதான பாகுபாடு பற்றிப் பார்ப்போம்.
ஆங்கிலத்தில் Nic Zoumboulis எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.