இவ்வாறான சூழலில், பொதுமன்னிப்பின் அடிப்படையில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இருந்தாலும் சில தமிழ் அரசியல் கைதிகளும் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகிஇருப்பதால் அவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்து தமிழ் அரசியல் தலைவர்களும் கைதிகளின் உறவினர்களும் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.