இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இலங்கையின் வடக்கிற்கு சென்று அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப் போவதாக இங்கு அறிவித்துள்ள நிலையில், அதற்கு தமது ஆதரவு கிடைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது. அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோர் உதவினர் சங்கத்தினர் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
——-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





