பத்து தமிழ் கட்சிகள் ஒன்று கூடி மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Source: Mathivavan
ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று யாழில் இடம்பெற்றது. தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நில அபகரிப்புக்கள், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் அத்துமீறல்களை தடுப்பதற்கு எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு நடவடிக்கை குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன் முக்கிய மூன்று தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share