தமிழர்களின் பூர்வீக பகுதியாக கருதப்படும் யாழ்.நெடுந்தீவு பகுதியில் அமைந்துள்ள வெடியரசன் கோட்டையின் வரலாற்றினை தொல்பொருள் திணைக்களம் திரிபுபடுத்தி அதனை பௌத்த அடையாளமாக்க தொல்பொருள் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்த்தரப்பினரால் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்த முயற்சிக்கு கடற்படையினரும் ஆதரவளிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுளளது.
வடக்கு கிழக்கில் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு பௌத்தமயமாக்கல் இடம்பெற்று வருவதனை கண்டித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மிகக்கடுமையாக கண்டனங்களை தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





