இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இரணைதீவில் ஜனாஸா அடக்கம். சர்ச்சையா? சமரசமா?

Burial of Covid victims in Sri Lanka Source: Mathivaanan
இலங்கையில், பல்வேறு போராட்டங்கள் வேண்டுகோள்கள் மற்றும் கண்டனங்களை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களின் உடல்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் முடிவுக்கு இரணைதீவு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். அம்மக்களுடன் இணைந்து கிறிஸ்த்தவ மதகுருமார்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அரசின் முடிவினை மாற்றிக்கொள்ளுமாறு பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
Share