மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரமும் நிறைவேறாத வாக்குறுதிகளும்!

Source: Mathivavan
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த ஊதியமாக ஆயிரம் ரூபா வழங்குவதாக அதிபர் தேர்தல் காலத்தில் தற்போதைய அரசு வாக்குறுதி வழங்கியது. அதுபோல், கடந்த வரவு செவுத்திட்டத்திலும் ஜனவரி மாதம் முதல் இந்த ஆயிரம் ரூபா அதிகரிப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள போதிலும், தோட்ட கம்பனிகள் அதனை வழங்க மறுக்கின்றன. இது தொடர்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் முடிவில்லாமல் முடிவடைந்துள்ளன. அரசு வாக்குறுதி அளித்தபடி தமது இந்த நீண்ட காலக்கோரிக்கையை நிறைவேற்றுமாறு மலையக மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share