இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து செல்லும் நிலையில் இந்த பணிகளுக்கு படையினரை முன்னிலைப்படுத்தி வருவதற்கு எதிரணிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. அதோடு, அண்மையில், தீப்பரவலுக்குள்ளான கப்பலில் இருந்து கரையொதுங்கி வரும் பொருட்களால் கடல் உயிரினங்கள் ஆபத்தை எதிர்கொள்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள். இதன் காரணமாக கடல் உணவுகளை உண்பதை மக்கள் தவிர்த்து வருகிறார்கள். இதனால், ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




