மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் அங்கிருந்து விரட்டப்படுவதாக குற்றச்சாட்டு

Source: Supplied
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மயிலத்தமடு, மாதவனை என்ற கால்நடை மேய்ச்சல் தரை பகுதிகளில் அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்ட பெரும்பான்மை இன மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் அங்கிருந்து விரட்டப்படுவதாகவும், அதனால் தாம் பாரிய இன்னல்களைச் சந்தித்து வருதாகவும், இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பெரும்பான்மை இன விசாயிகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்கள். இந்த விடயத்தினை எதிரணி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share