கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினை அடுத்து பல்வேறு தரப்பினரும் நாட்டைவிட்டு வெளியேறிவந்த நிலையில், தற்போது வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வரும் விவகாரம் கல்வித்துறையிலும் சுகாதாரத்துறையிலும் பெரும் பிரச்சினையாக மாறியிருக்கின்றது. இதேவேளையில், தமிழர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் 13 வது அரசியலமைப்பு திருத்தத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் அரசியல் தலைவர்களை அதிபர் ரணில் சந்தித்து பேசி வருகிறார்.
இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





