பொருளாதார முன்னேற்றத்திற்கு ரூ.20 இலட்சம் கோடி நிவாரண நிதி

Source: Raj
இந்தியாவில் இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் ஏற்கனவே இந்திய முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு வருகின்ற மே மாதம் 17-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இவ்வேளையில் நேற்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 4-வது முறையாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 18-ந்தேதிக்கு முன் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, மத்திய அரசு, ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி பேக்கேஜ் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை!
Share