SKIP TO MAIN CONTENT

நீதிக்கு வந்த சோதனை!

CC
Source: Getty

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்ய நாயுடு நிராகரித்துள்ளார். தலைமை நீதிபதி மீது வெறும் யூகத்தின் அடிப்படையிலேயே குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாக கூறி, மனுவை வெங்கய்ய நாயுடு தள்ளுபடி செய்தார். இந்திய நீதித்துறையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. நாடாளுமன்றத்தின் இரு சபைகளை சேர்ந்த பெரும்பகுதி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக தீர்மானத்தை ஆதரித்தால் மட்டுமே அவரை பதவி நீக்கம் செய்ய முடியும். இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு என்பது இதுவே முதல் முறை. நீதிக்கு வந்த சோதனைக்கு காரணம் என்ன? விளக்குகிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now