SKIP TO MAIN CONTENT

நக்கீரன் கோபால் கைது! தமிழகத்தில் மிரட்டப்படுகின்றனவா ஊடகங்கள்?

cc
Source: Raj

ஆளுநரின் பணிகளில் தலையிட்டதாக நக்கீரன் இதழின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான கோபால் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஆளுநரின் பணிகளில் தலையிட்டதாக அவர் மீது மீது ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், உண்மையில் நக்கீரன்' கோபாலின் கைதுக்குப் பின்னணியில், நக்கீரன் இதழில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்து வெளிவந்த ஒரு கட்டுரையே காரணம் எனத் தகவல் வெளியானது. அவரின் கைதுக்கு தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் "கவர் ஸ்டோரி"காக கைது செய்யப்பட்டது நடுநிலையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நக்கீரன் கோபால் சிறையில் அடைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை போலீஸ் காவலில் வைக்க முடியாது என எழும்பூர் நீதிமன்றம் விடுவித்தது. நக்கீரன் கோபாலின் கைதும் பின்னணியும்! நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now