SKIP TO MAIN CONTENT

காஷ்மீர் மறுசீரமைப்பு சாதனையா? அல்லது வேதனையா?

cc
Source: Raj

இந்திய மாநிலங்களவை மற்றும் மக்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா பலத்த பரபரப்புகளிடையே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் மாநிலத்துக்கு இது நாள் வரை வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள், இந்திய அளவில் மிக பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்திய சுதந்திர வரலாற்றில் இது ஒரு பொன்னான நாள் என்று மத்தியில் ஆளும் பாஜக தலைவர்கள் கூறிவரும் அதே நேரத்தில், எதிர் கட்சிகளோ பா.ஜ.கவின் செயல் ஜனநாயகப் படுகொலை என்று கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா என்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பெரிய கேள்வி தற்போது எழுந்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசின் முடிவு நல்லதா, கெட்டதா என்பதை வரலாறு முடிவு செய்யும் என உள்துறை அமைச்சர் அமீத் ஷா நம்பிக்கை தெரிவித்தாலும், ஜம்மு-காஷ்மீரையும் லடாக்கையும் பிரித்து விட்டது மத்திய அரசு என்று கண்டங்களை தெரிவித்து வருகின்றனர் காஷ்மீரின் அரசியல் கட்சி தலைவர்கள். நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now