SKIP TO MAIN CONTENT

ரஜனி அரசியலுக்கு வருகிறார்?

FB
FB Source: FB

பல வருடகங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலில் பிரவேசம் செய்ய போவதாக மறைமுகமாக தெரிவித்தார். பல வருடங்களாகவே நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் குதிப்பர் என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்தாலும், அவர் எந்த முடிவையும் அறிவிக்கவே இல்லை. தற்போது அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து தெரிவித்த சில மறைமுக கருத்துக்கள் அவரின் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இதே நேரத்தில், நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்து வெளிவர போகிற எந்திரன் 2-ஆம் படத்தை ஓட வைக்கவே இவ்வாறு சர்ச்சையாக பேசுகிறாரா என்று அவரின் எதிர்மறையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்றைய தமிழக அரசியல் களத்தில் ரஜினியின் பிரவேசம் தேவை தானா? சுமார் 15 வருடங்களாக "ஆண்டவன் சொன்ன அரசியலுக்கு வருவேன்" என்று கூறிய ரஜினி தற்போது செய்துகொண்டிருப்பது சினிமாவா அல்லது அரசியலா? வழக்கம் போல் ரஜினியின் அரசியல் பிரவேசம் கிணற்றில் போட்ட கல் போல் அமைதியாகிவிடுமா அல்லது "நான் நெருப்புடா" என்பது போல் கிளம்பி எழுமா?ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஒரு பார்வை! தருகிறார் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now