SKIP TO MAIN CONTENT

வரம்பு மீறி செயல்படுகின்றனர் பாஜகவின் தமிழக தலைவர்கள்?

CC
Source: Raj

காவல்துறை மற்றும் நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய புகாரில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹ.ராஜா மீது தமிழக காவல்துறையினர் இரு தினங்களுக்கு முன்பு 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றமும் தாமாக முன்வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சர்ச்சை அடங்குவதற்கு முன், பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மீதும் ஒரு புகார் எழுந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்த போது, ஆட்டோ டிரைவர் ஒருவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் தமிழிசையின் பின்னால் நின்று கொண்டிருந்த பாஜக நிர்வாகிகள், அந்த ஆட்டோ டிரைவரை பின்னால் தள்ளி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. பாஜகவின் தமிழக தலைவர்கள் வரம்பு மீறி செயல்படுகின்றனர் என்ற விமர்சனங்கள் எழுந்துவருகிறது. இது குறித்து எமது தமிழக நிருபர் ராஜ் வழங்கும் பார்வை.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now