பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

Source: Raj
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக, ஜூன் 1ம் தேதி தேர்வு துவங்கும் என வெளியிடப்பட்ட அறிவிப்பு இரத்தானது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் பல மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வர முடியாத சூழல் இருப்பதால் பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித்தலைவர் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! வழங்குகிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.
Share