தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் நேற்று அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த அதிரடி தீர்ப்புக்கு சங்கரின் மனைவி கௌசல்யா, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கௌசல்யாவின் தாய் இந்த கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் தனது தாயின் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கௌசல்யா கூறியுள்ளார்.
Share





