டாஸ்மாக் மதுபானங்கள் அதிரடியாக விலையுயர்வு!

Source: Raj
ஊரடங்கு கட்டுப்பாடுகள் சிறிது தளர்த்தப்பட்ட நிலையில் நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் டாஸ்மாக் மதுபானங்கள் விலையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. ஆனால் சென்னையில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதால், நாளை மே 7-ம் தேதி மதுபானக் கடைகள் திறப்பு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபற்றிய மேலதிக செய்திகளை பார்வைகளாக்கி முன்வைக்கிறார் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.
Share