கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்ற காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய கடல்தொழில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். கடந்த நன்கு நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்து உள்ளது. புதிய மசோதாவை ரத்து செய்ய இலங்கை அரசிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதால் போரட்டத்தை மீனவர்கள் விலக்கிக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.