தமிழகத்தில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் அவர்களது குடும்பத்தினரையும் அதிமுக கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் ஒதுக்கிவைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் கூடி ஆலோசித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், கட்சியை வளர்த்தெடுக்கவும் ஆட்சியை நல்ல முறையில் கொண்டுசெல்லவும் ஏதுவாக டிடிவி தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக கூறினார். இது பற்றிய மேலதிக தகவல்களுடன் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.